பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் அடுத்த ஆண்டு தனது பதவியை இராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளத்தை காரணம் காட்டி போரிஸ் ஜோன்சன், அடுத்த ஆண்டு தன் பதவியை இராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டிற்கு 150,402 பவுண்ட் சம்பளமாக பெறும் போரிஸ் ஜோன்சன், அது தனக்கு போதுமானதாக இல்லை எனவும், அதைக்கொண்டு வாழ முடியாது எனவும் கூறியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்னர் போரிஸ் ஜோன்சன், மாதத்திற்கு 23,000 பவுண்ட் சம்பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, போரிஸ் ஜோன்சன் அடுத்த ஆண்டு தனது பதவியை இராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.