யாழ்ப்பாணத்தில் சுய தனிமைப்படுத்தப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ள 173 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் எவருக்கும் கோரோனா தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது. இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார். 173 பேரில் கம்பஹாவைச் சேர்ந்த 9 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது