இறைச்சிக்காக மாடுகளை அறுப்பது தொடர்பில் அமைச்சரவையின் முக்கிய முடிவு


இலங்கையில் மாடுகளை இறைச்சிக்காக அறுப்பதை தடை செய்யும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான யோசனை அடங்கிய அமைச்சரவை பத்திரத்தை பிரதமர் மகிந்த ராஜபக்ச தாக்கல் செய்திருந்ததுடன் அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதனடிப்படையில், இந்த யோசனை சட்டமூலமாக தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர் சட்டமாக மாறும்.இந்த யோசனை இதற்கு முன்னர் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. எவ்வாறாயினும் இறைச்சிக்காக மாடுகள் அறுக்கப்படுவதை தடை செய்யும் சட்டத்திற்கு விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஏற்கனவே எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.

மாடு அறுப்பு தடை செய்யப்பட்டால் காளை மாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் இதனால், விலங்கு உற்பத்தியாளர்களுக்கு பொருளாதார பிரச்சினைகள் ஏற்படும் எனவும் அவர்கள் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post