சிங்கராஜா வனம் அபிவிருத்தி! வில்பத்து என்றால் இனவாதம் - இம்ரான் - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Wednesday, September 2, 2020

சிங்கராஜா வனம் அபிவிருத்தி! வில்பத்து என்றால் இனவாதம் - இம்ரான்

சிங்கராஜ பகுதியில் அபிவிருத்தியாக நோக்கப்படுவது வில்பத்துவில் இனவாதமாக நோக்கப்படுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்துள்ளார்.
கிண்ணியா, சூரங்கல்லின் நேற்று மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சிங்கராஜ வனத்தின் ஒருபகுதியை ஊடறுத்து வீதி ஒன்று அமைக்கப்பட்டதை தொடர்ந்து எழுந்த சர்ச்சையால் அந்த இடத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அந்த பாதையின் நிர்மாணப்பணிகளை தொடர்ந்தும் முன்னெடுக்க அனுமதி அளித்திருந்தார்.
சிங்கராஜா வனத்தை ஒட்டி வாழும் மக்களுக்கு கிடைக்கும் அபிவிருத்தி வில்பத்துவை அண்டி வாழும் மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. யுத்தத்தால் இடம்பெயர்ந்த அந்த பகுதி மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீள குடியமர்ந்த போது வில்பத்து வனப்பகுதியை அம்மக்கள் அழிக்கிறார்கள் என கூறியவர்களே இன்று வனப்பகுதிக்கு சேதம் ஏற்படாமல் பாதையை அமைக்க முடியும் என கூறுகின்றனர்.
வனப்பகுதிக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதை அமைக்க முடியும் என்றால் வனப்பகுதிக்கு பாதிப்பு ஏற்படாமல் மக்கள் மீள்குடியேறவும் முடியும்.
நடைபெற்றுமுடிந்த அனைத்து தேர்தல்களிலும் வில்பத்துவை காரணம் காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்துக்கு எதிராக சேறு பூசி வாக்கு சேகரித்தவர்களே இன்று சிங்கராஜவில் பாதை அமைக்கிறார்கள்.
இவர்களால் சிங்கராஜ பகுதியில் அபிவிருத்தியாக நோக்கப்படுவது வில்பத்துவில் இனவாதமாக நோக்கப்படுகிறது.
சிங்கராஜவுக்கு ஜனாதிபதி சென்று அப்பகுதி மக்களிடம் பாதை வேண்டுமா என கேட்டதை போல் வில்பத்து பகுதிக்கும் சென்று அம்மக்களின் அபிப்ராயத்தை கேட்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment