அனைத்து இனங்களையும் அரவணைத்து முன்மாதிரியான அரசியலை மேற்கொள்வேன்' - புத்தளம், கொத்தாந்தீவில் அலி சப்ரி ரஹீம் எம். பி தெரிவிப்பு!

புத்தளம் மாவட்டத்தில் சகல இனங்களையும் அரவணைத்துஒரு முன்மாதிரியான அரசியலை முன்கொண்டு செல்ல திடசங்கற்பம் பூண்டுள்ளதாகவும்மக்கள் தம்மீது வைத்த நம்பிக்கையை ஒருபோதும் பாழ்படுத்தப் போவதில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார்.

புத்தளம்கொத்தாந்தீவில் நேற்று (05) இடம்பெற்ற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

அலி சப்ரி ரஹீம் எம்.பியின் பாராளுமன்றச் செயலாளர் இர்ஷாட் ரஹ்மத்துல்லாஹ்பிரத்தியேகச் செயலாளர் ஜே.எம்.ஜௌஸிகொத்தாந்தீவு மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் முஹம்மட் நஸீர் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்ட இக் கூட்டத்தில்அலி சப்ரி ரஹீம் எம். பி மேலும் கூறியதாவது,

"அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைகளினது புரிந்துணர்வுதியாகத்தினாலும்மக்களின் ஒற்றுமையினாலுமே நீண்டகாலத்தின் பின்னர்இந்த மாவட்டத்தில் சிறுபான்மை பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெற்றது.

இத்தலைமைகளினதோ கட்சிகளினதோ நம்பிக்கையை ஒருபோதுமே சிதறடிக்கமாட்டேன். அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த நான்ஒருபோதும் கட்சித் தலைமைக்குத் துரோகமிழைக்கப் போவதில்லை. அதுபோன்றுதலைமை எடுக்கும் முடிவுகளுக்கும் கட்டுப்பட்டு அரசியலை மேற்கொள்வேன்.

நமது மாவட்ட மக்கள் எதிர்பார்த்த அபிவிருத்திகள் மற்றும் நலனோம்புத் திட்டங்களை நிறைவேற்றமக்கள் காங்கிரஸ் தலைமையுடன் இணைந்து உழைப்பேன்.

அரசுடன் நான் இணையப்போவதாக கதைகள் வெளிவருகின்றன. எனது எதிர்கால முடிவுகள் எவையும் கட்சித் தலைமையின் கொள்கைகளுக்கு மாற்றமாக இருக்காது. அத்துடன்குறுக்குவழியாலோபின்கதவாலோ பதவிகளை தேடிச் செல்லமாட்டேன். நேர்மையான அரசியல் கலாச்சாரமொன்றை பின்பற்றுவேன்" என்றார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK