நாட்டில் மாடுகள் வெட்ட தடை செய்வது குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்மொழிந்த யோசனையை ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கீகரித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாட்டிறைச்சி தேவை ஏற்படின் வெளிநாட்டில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்வது குறித்த வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்கலாம் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
இறைச்சிக்காக மாடுகளை அறுத்தல், ஒரு தேசிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கின்றது.
இலங்கையில் மாடு அறுப்பதையும் மாட்டிறைச்சிக் கடைகளையும் தடை செய்ய வேண்டும் என்று 2014 பெப்ரவரி மாதத்தில், பொது பல சேனா அமைப்பு பாரிய எதிர்ப்பு பிரசாரம் ஒன்றை மேற்கொண்டிருந்தது.
பின்னர் நல்லாட்சி அரசில், வெளிநாட்டில் இருந்து இறைச்சியை இறக்குமதி செய்வதின் ஊடாக நாட்டில் மாடறுப்பை தடை செய்வதற்குறிய செயல் திட்டத்தை முன்னெடுக்கும்படி நிதி அமைச்சருக்கு தான் பணித்திருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கடந்த 2016ம் ஆண்டு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது