அரசாங்கத்தின் தொழிலற்ற ஒரு லட்சம் பேருக்கு தொழில் வழங்கும் திட்டம் ஆரம்பம் - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Wednesday, September 2, 2020

அரசாங்கத்தின் தொழிலற்ற ஒரு லட்சம் பேருக்கு தொழில் வழங்கும் திட்டம் ஆரம்பம்


அரசாங்கத்தின் தொழிலற்ற ஒரு லட்சம் பேருக்கு தொழில் வழங்கும் திட்டம் இன்று ஆரம்பமாகிறது.

முறைசார் கல்வி அல்லது தொழில் நிபுணத்துவம் இல்லாதவர்கள் மற்றும் வறுமையில் உள்ளவர்களுக்கு அரசாங்கத்தின் பல்நோக்கு அபிவிருத்தி செயலணியின் கீழ் தொழில்களை உருவாக்கிக்கொடுக்கும் வகையில் இந்த திட்டம் அமுல் செய்யப்படுகிறது.

10 அகவைக்கும் 40 அகவைக்கும் உட்பட்ட கல்விப்பொதுத் தராதரம் அல்லது முறைசார கல்வியைப் பெறாதவர்களே இந்த திட்டத்துக்குள் உள்வாங்கப்படவுள்ளனர்.

இவர்களுக்கு பயிற்சிக்காலமான 6 மாதங்களுக்கு மாதாந்தம் 22ஆயிரத்துக்கு 500 ரூபா கொடுப்பனவாக வழங்கப்படும்.

இதனையடுத்து அவர்களுக்கு தொழில் திறமைகளுடன் மாதம் ஒன்றுக்கு 35ஆயிரம் ரூபா வேதனம் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

10 வருடங்கள் அவர்கள் தொடர்ச்சியாக பணியாற்றும்போது அவர்கள் ஓய்வூதிய கொடுப்பனவு திட்டத்துக்குள் உள்வாங்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment