துமிந்த சில்வாவுக்கு எதிரான தீர்ப்பு குறித்து மீண்டும் விசாரணை வேண்டும் - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி - 076 665 9 665

Thursday, September 3, 2020

துமிந்த சில்வாவுக்கு எதிரான தீர்ப்பு குறித்து மீண்டும் விசாரணை வேண்டும்

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனை தீர்ப்பு குறித்து அரசியல் சார்ந்த ஒரு ஆணைக்குழுவின் மூலம் மீண்டும் விசாரிக்க முடியும் எனவும், வழக்கின் தீர்ப்பு தொடர்பாக விசேட விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சீ தொலவத்த தெரிவித்துள்ளார்.

துமிந்த சில்வாவுக்கு எதிரான தீர்ப்புடன் சம்பந்தப்பட்ட நீதிபதிகள் அரசியல்வாதிகளுடன் உரையாடுவதை நாம் பார்த்தோம். இதனால் ஆணைக்குழு அல்லது அரசியல் ரீதியாக மீண்டும் விசாரணை நடத்தி திருத்தங்களை செய்ய முடியும்.

குற்றவாளி ஒருவர் சட்டத்தில் இருந்து தப்பிப்பதை விட குற்றவாளி அல்லாத ஒருவர் சட்டத்தில் சிக்கி தண்டனை அனுபவித்து வருவார் என்றால், அது மிகப் பெரிய பாவம்.

ரஞ்சன் ராமநாயக்கவுடன் நீதிபதிகள் உரையாடியதை பார்த்தோம். இந்த உரையாடல் வழக்கு தீர்ப்பில் பாதிப்புகளை ஏற்படுத்தியதா என்பது குறித்து விசேட விசாரணை நடத்துவது பொருத்தமானது எனவும் தொலவத்த குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment