மீண்டும் வேகமாக பற்றி எரியும் டயமன் கப்பல்! வெடித்து சிதறினால் இலங்கைக்கு ஆபத்து - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Tuesday, September 8, 2020

மீண்டும் வேகமாக பற்றி எரியும் டயமன் கப்பல்! வெடித்து சிதறினால் இலங்கைக்கு ஆபத்து

இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான  கப்பலில் மீண்டும் தீ பரவல் தீவிரம் அடைந்துள்ளதாக சற்று முன்னர் இலங்கை கடற்படை தளபதி தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை இரண்டாவது முறை ஆரம்பித்த தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த வேகத்தில் தீப்பரவினால் வெடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகின்றது.
கப்பல் வெடித்தால் இலங்கை கடற்பரப்பிற்கு பாரிய பாதிப்புகுள் ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தீயை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை கடற்படையினர் 2000 கிலோ கிராமிற்க்கும் அதிகமான திரவ வகை ஒன்றை விமான மூலம் வீசி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இலங்கை கடற்பரப்பில் எண்ணெய் கசிந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் ஆராய்வதற்காக வெளிநாட்டில் இருந்து ஆய்வு குழுவொன்று இலங்கை வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த கப்பலில் 27 ஆயிரம் மெற்றிக் தொன் மசகு எண்ணெய் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment