கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் முபாரிஸ் தாஜுதீனுக்கு "தேசமான்ய" விருது

 


நூருல் ஹுதா உமர்

கல்முனை மாநகரசபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பிலான முன்னாள்  உறுப்பினர் முபாரிஸ் தாஜுதீன் 2020 ஆம் ஆண்டுக்கான "லங்கா தேசமான்ய" விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். மருதமுனையைச் சேர்ந்த சமூக சேவையின்பால் அதிக நாட்டமுள்ள பிரபல வர்த்தகரான இவர் தனது மாநகரசபை உறுப்புரிமைப் பதவிக்காலத்தின் போது காத்திரமான சமூக உதவிகளை நிறைவேற்றியிருந்தார்.

சமூகத்தின் குரலாய் மாநகர சபையில் மக்களின் தேவைக்காக ஒலித்த இவரது கருத்துக்கள் பல்வேறு சமூக அபிவிருத்திகளுக்கும் வித்திட்டிருந்தமை இவரது பதவிக்கால செயற்பாடுகளின் சிறப்பான பதிவுகளாகும்.

நேற்று (19) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்ற சாதனையாளர்களுக்கான  விருது வழங்கும் விழாவிலேயே இவர்  இவ்விருது வழங்கிவைக்கப்பட்டுள்ளார். குறித்த நிகழ்வில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மருதம் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான முபாரிஸ் தாஜுதீன், வர்த்தக நிர்வாக இளமானி (BBA) பட்டப்படிப்பினை நிறைவு செய்துள்ளதோடு, தற்போது வர்த்தக நிர்வாக முதுமானி (MBA) கற்கை நெறியினை தொடர்ந்துவருகிறார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post