2025 ஆண்டுக்குள் சுத்தமான குடிநீர் - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Friday, September 4, 2020

2025 ஆண்டுக்குள் சுத்தமான குடிநீர்

2025 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைவருக்கும் 24 மணிநேரமும் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கவனம் செலுத்தியுள்ளார்.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது சுபீட்சமான எதிர்காலம் என்ற ஜனாதிபதியின் கெள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைவருக்கும் குடிநீர் என்ற திட்டம் குறித்து ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் 47 இலட்சம் குடும்பங்களுக்கு தேவையான குடிநீரை பெற்றுக்கொள்ள ஆறுகள் மற்றும் நீர் நிலைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் நீர் பெற்றுக்கொள்ளும் கிணறுகளை சுத்தப்படுத்தி பாதுகாக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நீர் விநியோகத்தின் போது, சாலைகளில் முன்னெடுக்கப்படும் திருத்தப்பணிகள் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களையும், அதிக செலவீனங்களையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment