நீதி அமைச்சராக நியமனம் பெற்ற அலி சப்ரிக்கு, முஸ்லிம்கள் சார்பில் ஏ.எல்.எம். உவைஸ் வாழ்த்து - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Sunday, August 16, 2020

நீதி அமைச்சராக நியமனம் பெற்ற அலி சப்ரிக்கு, முஸ்லிம்கள் சார்பில் ஏ.எல்.எம். உவைஸ் வாழ்த்து

(சில்மியா யூசுப்)

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில்  தேசியப் பட்டியலில் தெரிவு செய்யப்பட்டு  நீதி அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி  அலி சப்ரிக்கு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளன தேசிய அமைப்பாளரும்  முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.எம். உவைஸ், தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

அவர் அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,  நீதி அமைச்சர் அலி சப்ரி,  ஜனாதிபதியினால் தெரிவாகியுள்ள  அமைச்சரவை அந்தஸ்துள்ள  (கெபினட்) அமைச்சர். இவர் முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரமல்லாது, இன மத மொழி  பேதமின்றி அனைவருக்கும் உரித்தானவர் என்பதை அனைவரும்  புரிந்து கொள்ள வேண்டும். 

முன்னைய அரசியலைப் போலன்றி நாம்  அனைவரும் புதிய கண்ணோட்டத்தில் ஒரு புதிய பாதையில்  பயணிக்க வேண்டும். இதுவே இன்றைய நமது எதிர்பார்ப்பாகும்.  இதற்காக, அனைத்து இலங்கை வாழ்  மக்களும் ஒன்றித்துப்  பயணிக்க  இருக்கின்றோம். 

நீதி அமைச்சர்  அலி சப்ரி, மக்களின் வாக்குகளால் இன்றி நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ்வினால் நேரடியாகத் தெரிவு செய்யப்பட்ட ஒரு  தலைவர். இவரை நீதி அமைச்சராக நியமிப்பதற்கு எதிராக சிலர் சதிகள் செய்தனர். இருந்தாலும், இதனை எதிர்த்து  ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றிணைந்து  உறுதியாக நின்று, இவருக்குப் பொருத்தமான குறித்த இந்நியமனத்தை வழங்கி வைத்தமையை விசேடமாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். 

இதற்காக, நாம் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும்  நன்றி  தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். இனிவரும் காலங்களில், எமது செயற்பாடுகள்  யாவும் "பொது மக்கள்" என்ற கண்ணோட்டத்திலேயே செயற்படுத்த நாம்  இருக்கின்றோம் என, கண்டியில் அண்மையில்  இடம்பெற்ற நிகழ்வொன்றிலும் நான் குறிப்பிட்டிருந்தேன். 

No comments:

Post a Comment