பிரதேச சபை உறுப்பினர் ஹசீப் மரிக்கார் கைது - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Monday, August 17, 2020

பிரதேச சபை உறுப்பினர் ஹசீப் மரிக்கார் கைது

பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹசீப் மரிக்கார்  விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதிகாரி கொடை ஜும்மா பள்ளி அருகாமையில் பள்ளிவாசலுடைய  வெளிப்புற வாய்க்கால் புணர் நிர்மாணமப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில்  பள்ளிவாசலுக்கு அருகாமையில் முச்சக்கர வண்டி ஓடும் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் பேருவளை பிரதேச சபை தலைவர் மேணக்க உடன் கதைத்து வாய்க்கால் திருத்தப் பணியை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டதற்கு அமைய இப்பணியை நிறுத்த பொலிஸார் அறிவுருத்தப்பட்டனர் .  பிரதேச பொலிசாரிடம் மக்கள் இது தொடர்பில் கதைத்த நிலையில் திடீரென விஷேட அதிரடிப்படையினர் வந்து தாக்குதல் நடத்தினர். பொதுமக்களை அதிரடிப்படையினர் தாறுமாறாக தாக்கினர்
 

      பேருவளை    பிரதேசசபை உறுப்பினர்களான ஹசீப் மரிக்கார்,பைஸான் நைசர்  உடனடியாக வந்து பொலீஸாரிடம் இது சம்பந்தமாக கலந்துரையாடும் போது எஸ் டி எப் பிரதேச சபை உருப்பினர்கள் இருவரையும்   தாக்கியுள்ளனர். மேலும்  ஹஸீப் மரிக்காரை பொலீஸார் கைது செய்துள்ளனர்.எதிர் வரும் புதன் கிழமை வரை விளக்கமரியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்No comments:

Post a Comment