ராஜபக்ச சகோதரர்கள் வெற்றிக்கு இதுவே காரணம்! மனோ கணேசன் வெளியிட்ட தகவல் - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி - 076 665 9 665

Sunday, August 9, 2020

ராஜபக்ச சகோதரர்கள் வெற்றிக்கு இதுவே காரணம்! மனோ கணேசன் வெளியிட்ட தகவல்

ராஜபக்ச சகோதரர்களிடையே காணப்படும் பாசம்தான் அவர்களது வெற்றிக்கு அடிப்படை காரணம் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார். அந்த பதிவில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“எனக்கு இப்படி ஒரு தம்பி இல்லையே என ஏக்கமாக இருக்கிறது..!
பிறப்பால் "அண்ணா" என கூட வந்தவர்களும் சரி, இடையில் "அண்ணா" என கூட வந்தவர்களும் சரி, என்னை பயன்படுத்தி அரங்குக்கு வந்து விட்டு என் முதுகில் அல்லவா குத்துகிறார்கள்..?
"ராஜபக்ச சகோதரர் மத்தியில் முரண்பாடு. சும்மா படம் காட்டுகிறார்கள்" என்று எவரும் சொல்லலாம்.
ஆனால் இவ்வளவு நாள் படம் ஓட்ட முடியாது. இந்த பாசம்தான் இவர்களது வெற்றிக்கு அடிப்படை.” என அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment