‘அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும்’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்!

நீதி அமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அலி சப்ரிசகல சமூகங்களாலும் நேசிக்கப்படும் வகையில்பவ்வியமான கருத்துக்களை வௌியிடுவாரென தான் எதிர்பார்ப்பதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷக்களின் அரசாங்கத்தில்நீதி அமைச்சராக அலி சப்ரி நியமிக்கப்பட்டுள்ளதைமுஸ்லிம் காங்கிரஸ் பெருமனதுடன் வரவேற்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும்அவர் அண்மையில் தெரிவித்து வரும் கருத்துக்கள் தொடர்பில்ஹாபிஸ் நஸீர் அஹமட் குறிப்பிட்டுள்ளதாவது,

"குறித்த ஒரு சமூகத்தின் பிரதிநிதியாகச் செயற்படாதுஅரசாங்கத்தின் கொள்கைகளைத் துணிச்சலுடன் முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமைசிறுபான்மை மக்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. அமைச்சுப் பொறுப்பையேற்ற சில பொழுதுகளில் இவ்வாறான கருத்தை அமைச்சர் அலி சப்ரி வௌியிட்டமைமகிழ்ச்சிப்பிரவாகத்தின் வௌிப்பாடாகவே நான் பார்க்கிறேன். எந்த விடயத்திலும் உணர்ச்சிவசப்படாமல் கருத்துக்களை வௌியிட வேண்டிய காலத் தேவையில் நாம் உள்ளோம். சில தலைமைகளின் உணர்ச்சிகரப் போக்குகளேசிறுபான்மைச் சமூகங்களை இன்று பெருந்தேசிய அரசியலிலிருந்து தனிமைப்படுத்தியுள்ளது.

எனவே,பொறுப்புமிக்க அமைச்சைப் பொறுப்பேற்றுள்ள அலிசப்ரிதுள்ளாமலும் துவழாமலும் நடந்துகொள்வதுதான்இந்த அரசாங்கத்தின் நம்பகத்தன்மையை சிறுபான்மையினர் மத்தியில் இன்னும் அதிகரிக்கச் செய்யும்.

அரசியலமைப்பின் 19 ஆவது சரத்தை நீக்கும் விடயத்தில் "எவருக்கும் அஞ்சப்போதில்லை" என்று அவர் எதற்காகக் கூற வேண்டும். தேவைக்கு அதிகமான பாராளுமன்றப் பலத்தையுடைய அரசு எவருக்கும் அஞ்ச வேண்டியதில்லைதான். ஆனால்இதிலுள்ள தர்மங்கள்நியாயங்களைச் சிந்திப்பது ஒரு அரசின் கடமை என்பதை அமைச்சர் என்ற வகையில்அலி சப்ரி மறக்கலாகாது. இவ்வாறு செயற்பட்டாவது சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாப்பீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

உங்களை வைத்துத்தான் முஸ்லிம்களின் சில மத விடயங்களை வெல்வதற்கு எமது சமூகம் எதிர்பார்த்துள்ளது. ஆனால்தாங்கள் தெரிவித்து வரும் கருத்துக்கள்இருப்பதையும் இல்லாமல் செய்வதற்கு நீங்கள் உடந்தையாக்கப்படுவீர்களோ! என்றே முஸ்லிம்கள் அஞ்சுகின்றனர்.

ஷரீஆச் சட்டம்அரபு மத்ரஸாக்கள்முஸ்லிம் தனியார் சட்டம்விவாக - விவாகரத்துச் சட்டம் உள்ளிட்ட பல விடயங்களை அரசுக்கு தெளிவுபடுத்திஎமது கலாசாரத்தைப் பாதுகாப்பீர்கள் என எதிர்பார்க்கின்றோம். அத்துடன்முஸ்லிம்களை இந்த அரசுக்கு எதிராக திசை திருப்பிய காரணிகளை இல்லாமல் செய்வதும் உங்கள் கடமையில் தங்கியுள்ளது என்பதுவும் எமது நம்பிக்கை.

எனவேஉங்களுக்குக் கிடைத்த இந்த முக்கிய அமைச்சுப் பதவியூடாக சிறுபான்மையினரின் குறிப்பாகமுஸ்லிம்களின் மதகலாசார நம்பிக்கைகளை பாதுகாக்கும் வகையில்செயற்பட வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்” என்று ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK